தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு

தென்றல் காற்றே 

கொஞ்சம் நில்லு (2) 

எங்கள் திருநபி இடம் போய் சொல்லு


சன்மார்க்கம் தந்த நபி

துன்மார்க்கம் வென்ற நபி

சாத்வீக மெய்ஞான பெருமான் (2)

கண்ணேடு கண்ணாகி

கல்புக்குள் நிறைவாகி

கருணைக்கு பொருள் தந்த எம்மான்

அவரைக் காண துடிக்கின்றேன் இந்நாள் (2)


மடமையாம் இருள் போக்கி

மதுவையும் விஷம் ஆக்கி 

மாந்தரின் நலம் காத்த பெருமான் (2)

மண்ணோடு பெண்மகவை

மகிழ்வோடு புதைத்திட்ட

மாபாத(க)ச் செயல் தடுத்த எம்மான்

அந்த மஹமூதை காண்பேனோ இந்நாள் (2)


கடல் காடு மலைப் பாலை

கடக்கின்ற இறைவேதம் 

கனிவாயில் இதழ் விண்ட பெருமான்  (2)

கடல்போன்ற பகைமுன்னே

உடைவாளை கரமேந்தி

படை கொண்டு பகைவென்ற எம்மான்

பத்ரு படையரசர் முகம் காண்பதெந்நாள்? (2)

(தென்றல் காற்றே)


எந்நாளும் அவர்நாமம் 

இயம்பாத கணமேது

இறையில்ல பாங்கோசை பெருமான் (2)

கைநகம் கண்தொட்டு

கனிகின்ற ஸலவாத்தில் 

கஸ்தூரி மணம் கமழும் எம்மான்

அவரின் கருணைக்கு அழுகின்றேன்

 இந்நாள் (2)

(தென்றல் காற்றே)




Comments

Popular posts from this blog

இறைவனிடம் கையேந்துங்கள்

ஒருநாள் மதீனா நகர் தனிலே